முடங்கி கிடக்கும் உலகம்

ஒற்றை ரயில் பயணத்தில்

இருக்கை விழும்பில் நிரம்பியிருந்தும்

சுற்றிலும் தனிமை தனிமை

முற்றிலும் சூழ் மூடர் கூட்டம்

முயன்றும் இறங்க முடியாது 

முடங்கி கிடக்கும் நிர்பந்தம்

இடையில் கண்ணயர்ந்தால்

நிரந்தரமாகுமோ எம் மன நிசப்தம்?

தூரத்தில் தொடரும் துக்கம் 

தூக்கத்திலும் வரா துர்சொப்பனம் 

தேவர் செலுத்தும் வாகனம்

தவழும் அழுகுரல் பாராது

தொடர்வது தானோ எம் கர்ம பலன்?

முற்பாதை கடந்தாலும்

முட்பாதை களையுமா?

முகத்திரை அகற்றினாலும் 

அகத்திரை விலகுமா?

மனிதா அறிவாயா 

யாத்திரை நிறைவிடம்

எம்குல மயானம் என்று

Indhu d/o Ramesh (22-E3)